The Chennai based Gandhi Peace Foundation organises a one-day Orientation Workshop for teachers on August 11th, Saturday at its premises at 332, Ambujammal Street, Alwarpet, Chennai-18 from 10 am to 04 pm.

The teachers who participate would receive a gift of a pack of 16 text books that contain 150 lesson modules with stories, quotes, illustrations printed in multi colour, along with anecdotes from the lives of Mahatma Gandhi and Vinoba Bhave. They would get orientation on how Gandhian values can be inculcated in the minds of children as Peace Education and a certificate of participation too! Snacks and lunch and rupees two hundred to cover the travel cost would be provided.
Interested teachers who work with children in classes 5,6,7&8 and teach subjects like drawing, art, literature  and language should register their details on or before 3rd August by email: kulandhaisamy.gpf@gmail.com or by post to: Gandhi Peace Foundation Madras, 332, Ambujammal Street, Alwarpet, Chennai-600018.
——————————————————————————————————————————————————————————————-

அண்ணல் காந்தியின் அகிம்சைப் பண்பாடு குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்கப்பட்டு அமைதிக்கான  மரமாக  வளரும் விதத்தில் சென்னை காந்தி அமைதி நிறுவனம் பள்ளி கல்லூரி மாணவர் ஆசிரியர்களுக்கு பணியாற்றிவருகிறது.

வாழும் சூழலைப் பழித்துரைக்காமல் “முதலில் நான் மாறுவேன்” (LET ME FIRST CHANGE) என்ற அணுகுமுறையில் குழந்தைகள் தாமாகவே முன்வந்து சிறு சிறு பணிகளைச் செய்யும்போது சுற்றுச்சூழலில் பெரிய பெரிய மாற்றம் வருவதுடன் குழந்தைகளும் “சேற்றில் மலரும் செந்தாமரைகளாக மலருவதையும்” பார்க்கிறோம்.
அமைதிக்கான பணியைக் குழந்தைகளிடமிருந்தே தொடங்கவேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. இந்நோக்கம் நிறைவேறும்படி தன்னார்வமுடன் தங்கள் பணியிடங்களில் முயற்சி செய்யும் ஆசிரியப் பெருமக்களை ஆச்சார்ய வினோபா பாவே “ஆச்சார்ய குலம்” என்ற பெயரில் ஒருங்கிணைத்தார். இன்றும் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இந்தியாவின் பல மூலைமுடுக்குகளில் நேர்மை, தியாகம், அகிம்சைப் பண்பாட்டின் சின்னங்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அமைதிக்கான பாடத்திட்டங்களை உருவாக்கி வழங்கி மேலும் வலுவூட்டும் பணியை காந்தி அமைதி நிறுவனம் செய்து வருகிறது.
இதன் தொடர்பாக,வரும் ஆகஸ்ட் 11 சனிக்கிழமை அன்று ஆசிரியர்களுக்கு அமைதிக்கான பயிலரங்கம் ஒன்று சென்னை காந்தி அமைதி நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு அமைதிக்கான 150 பாடங்கள் அடங்கியுள்ள  ரூபாய் 1500 விலையுள்ள 16 நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு இருவேளை சிற்றுண்டியும் மதிய உணவும் சான்றிதழும் வழங்கப்படும். போக்குவரத்து செலவுக்கு ரூபாய் 200/- மட்டுமே வழங்கமுடியும்.
5,6,7,8 வகுப்புகளுக்கு ஓவியம், மொழி மற்றும் கலை இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை உண்டு.
கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் விபரங்களை kulandhaisamy.gpf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அல்லது காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு  ஆகஸ்ட் 3 தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *